Sunday, September 30, 2012

thumbnail

அதிபர் பராக் ஒபாமாவிற்கு வலுவான ஆதரவளிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்

அமெரிக்க வாழ் இந்தியர்கள், கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு காட்டிய ஆதரவை காட்டிலும் இப்போது அதிகமானோர் அக்கட்சிக்கு தங்கள் ஆதரவை காட்டியுள்ளனர்.
 
ஆளும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் பராக் ஒபாமாவிற்கே 68 சதவிகிதம் அமெரிக்க இந்தியர்கள் தங்களின் வாக்குகளை அளிப்பார்கள் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. 5 சதவிகிதம் இந்தியர்களே ரிபப்ளிக்கன் கட்சித் தலைவர் ரோம்னியை ஆதரிப்பார்கள் என்றும் அது கூறுகிறது.
 
குறைந்த எண்ணிக்கையிலான அமெரிக்க இந்தியர்கள் தங்களின் சொத்துக்களை காப்பற்றவே குடியரசு கட்சியின் ஆதரவை நாடுகின்றனர் என்று கூறப்படுகிறது.
thumbnail

டுவென்டி-20 உலக கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

கொழும்பு: உலக கோப்பை டுவென்டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் இரண்டாவது முக்கிய போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணயில் ஹர்பஜன், பியுஷ் சாவ்லா நீக்கப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக சேவக், பாலாஜிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன் எடுத்து , இந்தியாவுக்கு 129 ரன் இலக்கு நிர்ணயித்தது. இந்தியா சார்பில் பாலாஜி 3, அஸ்வின் 2, யுவராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி 17 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. கம்பிர் டக் அவுட்டானார். சேவக் 29 ரன்கள் ‌எடுத்து, விக்கெட்டை பறிகொடுத்தார். கோக்லி 78, யுவராஜ் 19 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தன
thumbnail

மருத்துவப் படிப்புக்கான நுழைவு தேர்வை எதிர்த்து ம.தி.மு.க. போராட்டம்: வைகோ அறிவிப்பு

மருத்துவக் கல்வியில் சேர பொது நுழைவுத் தேர்வு எழுதவேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது என்று ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கண்டனம் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி மாணவர் சேர்க்கைக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில்சிபல் கூறியபோது, கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் மத்திய அரசு கிராமப்புற ஏழை மாணவர்களின் நலனைக் கவனத்தில் கொள்ளாமல், மருத்துவக்கல்வி, பல் மருத்துவக் கல்வி படிப்புக்கு இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.

சமூகநீதிக்கு அடித்தளம் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு உயர்நீதிமன்றமும், தமிழக அரசின் நடவடிக்கை சரிதான் என்று தீர்ப்பும் வழங்கி இருக்கின்றது.

இந்நிலையில் மருத்துவக் கல்வியில் சேர பொது நுழைவுத் தேர்வு எழுதவேண்டும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது. நகர்ப்புற மற்றும் மேல்தட்டு வகுப்பினர் மட்டுமே மருத்துவ பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பெறும் வகையில் பொது நுழைவுத் தேர்வை திணிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

தேசிய தகுதி மற்றும் பொது நுழைவுத் தேர்வு மூலம் குறிப்பிட்ட சதவிகித இடங்கள் மருத்துவ கல்லூரிகளில் தனியாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இது சமூக நீதியின் அடிப்படையையே தகர்த்து விடும்.

தமிழ்நாட்டில் 2007-ல் ரத்து செய்யப்பட்ட நுழைவுத் தேர்வை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது கல்வித் துறையில் மத்திய அரசின் தாந்தோன்றித்தனமான போக்கையே காட்டுகிறது.

மாநில அரசின் அதிகாரத்தில் இருந்த கல்வித் துறையைப் பறித்துக் கொண்டு, மத்திய அரசு தமது விருப்பம்போல் ஆதிக்கம் செலுத்துகிறது. சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிரான மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு திட்டத்தை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.

சமூக நீதிக்கு உலை வைக்கும் மத்திய அரசு தன் போக்கினை மாற்றிக் கொண்டு நுழைவுத் தேர்வினை ரத்து செய்யாவிடில் மைய அரசை எதிர்த்து மறுமலர்ச்சி தி.மு.க. கிளர்ச்சி செய்யும் என அறிவிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ கூறியுள்ளார்.
thumbnail

இளைஞர் காங்., தலைவராக யுவராஜா தேர்வு : வாசன் கோஷ்டிக்கு அதிக ஓட்டுகள்

சென்னை:தமிழக இளைஞர் காங்கிரஸ், மாநிலத் தலைவராக யுவராஜா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.தமிழக இளைஞர் காங்கிரஸ், மாநில நிர்வாகிகள் தேர்வுக்கான ஓட்டு எண்ணிக்கை, சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. காலை 9:30 மணிக்கு துவங்கி, மதியம் 2:00 மணி வரை, ஓட்டுகள் எண்ணப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின் போது, அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரிகளைத் தவிர, மற்றவர்களுக்கு வளாகத்துக்குள் அனுமதி இல்லை. பிரதான வாசல் கதவுகள் இழுத்து மூடப்பட்டிருந்தன. ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப் பட்டது.

மாநில நிர்வாகிகள் தேர்தலுக்கு, 25 பேர் போட்டியிட்டனர்; 20 ஆயிரத்து, 488 ஓட்டுகள் பதிவானது; 380 ஓட்டுகள் செல்லாதவை. இதில், முதலிடத்தைப் பெற்றவர் மாநிலத் தலைவராகவும், இரண்டாம் இடத்தைப் பெற்றவர் மாநில துணைத் தலைவராகவும், மூன்றாம் இடத்தைப் பெற்றவர் பொதுச் செயலர் பதவியும் வழங்கப்படுகிறது.

ஓட்டு எண்ணிக்கையில், 6,557 ஓட்டுகள் பெற்று, இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜா தேர்வு பெற்றார். லோக்சபா தொகுதிக்கான தேர்தலில்,அதிக ஓட்டு எண்ணிக்கை வித்தியாசத்தில்,காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி தலைவர் ஐஸ்வர்யா, 1,260 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்; பொறியாளரான இவர், மத்திய அமைச்சர் வாசனின் ஆதர வாளர்.
அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் சிரஞ்சீவியின் ஆதரவாளர் அமிர்தராஜா, நாகப்பட்டினம் லோக்சபா தொகுதி தலைவராக வெற்றி பெற்றுள்ளார். சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளில், வாசன் அணி முதல் இடத்தையும், சிதம்பரம் அணி இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது.
thumbnail

ரிங் ரோடு' ஒப்பந்தம் பெற போட்டி:அ.தி.மு.க.,வில் "பனிப்போர்'

மதுரை:மதுரை மாநகராட்சியில், "ரிங் ரோடு' அகலப்படுத்தும் பணிக்கு ஒப்பந்தம் பெறுவதில், அ.தி.மு.க.,வினரிடையே "பனிப்போர்' நிலவுகிறது.போக்குவரத்து நெரிசலை குறைக்க, 27 கி.மீ.,க்கு ரிங்ரோடு அமைக்கப்பட்டது. உலக வங்கி மானியம் ரூ.16 கோடி, வங்கி கடன் ரூ.27 கோடி பெற்று, திட்டத்தை நிறைவேற்றினர். ஒரு தவணைக்கு, ரூ.2 கோடி வீதம், 15 ஆண்டில், 30 தவணையாக கடனை திருப்பித்தர, மாநகராட்சி ஒப்பந்தம் செய்தது. அதன் பின், நெடுஞ்சாலைத்துறை வசம் ரோட்டை ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டது.எதிர்பார்த்ததை விட, ரிங் ரோட்டில் நல்ல வருவாய் கிடைத்தது; ஆண்டுக்கு ரூ.4 ÷காடி கிடைத்ததால், அதை, விட மனமில்லாத மாநகராட்சி, கடனை செலுத்த, தாமதம் செய்கிறது. "வருவாயில் பெரும் பகுதியை, ஆண்டுதோறும், பராமரிப்புக்கு செலவிட வேண்டும்,' என்ற விதியையும், பின்பற்றுவதில்லை. மாநகராட்சிக்கும், தனிநபருக்கும் வருவாய் அள்ளிக் கொடுக்கும் ரிங் ரோடு; பராமரிப்பு இல்லாததால், வாகன ஓட்டிகளுக்கு "எமனாக' உள்ளது. இதற்கிடையில், "ரிங் ரோடு' சுங்கச்சாவடி எண் 2 முதல் 5 வரையுள்ள ரோட்டை விரிவுப்படுத்தி, தடுப்புச்சுவர் அமைக்க, நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, ரூ.7.80 கோடியில் பணிகள் தொடங்க உள்ளது. இப்பணி, வேறு துறைக்கு செல்லாமல், மாநகராட்சிகட்டுப்பாட்டில் இருப்பதற்காக, ஒரு பணியை, ஒன்பதாக பிரித்து, முதல் சர்ச்சையில் சிக்கினர். காரணம், ஒவ்வொரு பணியும் ரூ.80 லட்சத்தில் தொடங்கி, 98 லட்சம் வரை, மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.இப்பணிகளுக்கான ஒப்பந்தங்களை பெற, அ.தி.மு.க., கவுன்சிலர்களுக்கு இடையே, கடும் போட்டி நிலவுகிறது. இவர்களின் "பனிப்போரால்' மாநகராட்சி நிர்வாகத்தில் "சலசலப்பு' ஏற்பட்டுள்ளது. மண்டலத்தலைவர்கள், குழுத்தலைவர்கள், கவுன்சிலர்கள், ஒப்பந்த பணியை பெற "படையெடுக்கும்' நிலையில், சில "செல்வாக்கானவர்களின்' பினாமிகளுக்கு பணிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் சிலர், மாநகராட்சி அலுவலகத்தில் வாக்குவதம் செய்த சம்பவமும் நடந்துள்ளது. ஒப்பந்த பணியை பெற காட்டும் ஆர்வத்தை, பணியின் தரத்தில் காட்டலா@ம.
thumbnail

தெலங்கானா பேரணி: போர்க்களமான ஹைதராபாத்

ஹைதராபாத், செப். 30: தெலங்கானா மாநிலத்தை உருவாக்குவதற்கு ஆதரவு தெரிவித்து ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. போலீஸôருக்கும், தெலங்கானா ஆதரவாளர்களுக்கும் இடையில் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.ஆந்திரத்தைப் பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்து ஹைதராபாத்தில் உசேன் சாகர் ஏரி அருகே உள்ள நெக்லஸ் சாலையில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்த தெலங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு (ஜே.ஏ.சி.) அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு முதலில் அனுமதி மறுத்த ஆந்திர அரசு, பின்னர் மாலை 3 மணி முதல் 7 மணி வரை பேரணி நடத்த அனுமதி வழங்கியது. இந்தப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் ஆங்காங்கே பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸôருடன் மோதலில் ஈடுபட்டனர். பேரணியில் கலந்து கொள்ள உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் முயற்சித்தபோது அவர்களை போலீஸôர் தடுத்தனர். இதனால் மாணவர்களுக்கும் போலீஸôருக்கும் இடையில் பல்கலைக்கழக வளாகத்தில் மோதல் வெடித்தது. போலீஸôர் மீது அவர்கள் கற்களை வீசித் தாக்கினர். பதிலடியாக கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் கலைக்க போலீஸôர் முயன்றனர். சில மாணவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், உசேன் சாகர் ஏரி அருகே பேரணியில் கலந்து கொண்டவர்கள் தடை ஆணைகளை மீறி ஆந்திர தலைமைச் செயலகத்தை நோக்கிச் செல்ல முயன்றனர். அவர்கள் மீது போலீஸôர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர். தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம் மற்றும் உயர் பாதுகாப்புப் பகுதிகள் செல்லும் சாலைகளை போலீஸôர் சீல் வைத்தனர். தலைமைச் செயலகம் அருகில் உள்ள "தெலுங்குத் தாய்' மேம்பாலத்தில் குவிந்திருந்த தெலங்கானா ஆதரவாளர்கள், போலீஸôர் மீது கற்களை வீசினர். இதில் சில போலீஸôர் காயமடைந்தனர். ரவீந்திர பாரதி பகுதிக்கு முன்னேற முயன்ற ஆதரவாளர்களை போலீஸôர் விரட்டியடித்தனர். இதேபோல், ஐமேக்ஸ் திரையரங்கு, கைரதாபாத் மற்றும் நெக்லஸ் சாலையை நோக்கிச் செல்லும் சாலைகளிலும் போலீஸôர் மீது கல்வீச்சு நடைபெற்றது. அவர்களைத் தடியடி நடத்திக் கலைக்கும் முயற்சியில் போலீஸôர் ஈடுபட்டனர். பேரணியால் ஹைதராபாத் நகரமே சில மணிநேரங்களுக்குப் போர்க்களம் போல் காட்சியளித்தது. பல்வேறு சாலைகளிலும் கோஷங்களை எழுப்பியபடி ஆதரவாளர்கள் சென்று கொண்டிருந்தனர்.எம்.பி.க்கள் மறியல் - கைது: தெலங்கானா பகுதியைச் சேர்ந்த எம்.பி.க்கள் முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் அலுவலகத்துக்குச் சென்று ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவது குறித்து புகார் தெரிவிக்கத் திட்டமிட்டனர். அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து மண்டா ஜெகந்நாதம், மது யாஷ்கி கெüடு, ஜி.விவேக், கட்டா சுகேந்தர் ரெட்டி, ராஜையா ஆகிய எம்.பி.க்களும் முன்னாள் எம்.பி. கேசவ ராவும் முதல்வர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் எம்.பி. மது யாஷ்கி கைடு, போலீஸôருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""எனது தொகுதியைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள் ஹைதராபாத்துக்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுக் கைது செய்யப்படுகின்றனர்.எங்கள் கட்சி எம்.பி.க்கள் பலரும் கைதாவதாக எனக்குத் தகவல் வருகிறது. இது தொடர்பாக முதல்வைரைச் சந்திக்க விரும்பினோம். ஆனால் எங்களை போலீஸôர் தடுப்பதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டுள்ளோம்'' என்றார். பேரணிக்கு அரசு அனுமதி அளித்திருந்தும், ஆதரவாளர்களை போலீஸôர் அத்துமீறிக் கைது செய்வதற்கு எம்.பி.க்கள் கொதிப்புடன் கண்டனம் தெரிவித்தனர். தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை போலீஸôர் கைது செய்தனர்.இது குறித்து தெலுங்கு தேசம், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பா.ஜ.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கூறுகையில் பேரணியில் பங்கேற்க வந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினர். முன்னதாக, பேரணியை முன்னிட்டு ஹைதராபாத் நகர் முழுவதும் போலீஸôர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிஸர்வ் போலீஸôர் உள்பட துணை ராணுவப் படையினரும் ஏராளமான அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். வன்முறை அச்சம் காரணமாக, 27 ரயில்களை தென் மத்திய ரயில்வே ரத்து செய்தது. ஆந்திர அரசுப் போக்குவரத்துக் கழகம் ஹைதராபாதில் சில பஸ் சேவைகளை ரத்து செய்திருந்தது.அமைச்சர்கள் வேண்டுகோள்: முன்னதாக, அமைதியான முறையில் பேரணி நடத்துமாறு தெலங்கானா ஆதரவாளர்களை மாநில பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கே.ஜனா ரெட்டி கேட்டுக் கொண்டார். தெலங்கானா பகுதியைச் சேர்ந்தவரான அவர் கூறுகையில், ""தனி மாநிலக் கோரிக்கைக்காக தேவைப்பட்டால் பதவி விலகவும் அமைச்சர்கள் தயார்'' என்று தெரிவித்தார். இதேபோல், அமைதியான முறையில் பேரணி நடத்துமாறு மாநில உள்துறை அமைச்சர் பி.சபிதா ரெட்டியும், ஆந்திர காவல்துறைத் தலைவார் வி.தினேஷ் ரெட்டியும் கேட்டுக் கொண்டனர்.
thumbnail

வி.ஏ.ஓ. தேர்வு இன்று நடக்கிறது 1870 இடங்களுக்கு 9¾ லட்சம் பேர் போட்டி


சென்னை:தமிழகம் முழுவதும், 3,483 மையங்களில், இன்று வி.ஏ.ஓ., போட்டித் தேர்வு நடக்கிறது. 9.72 லட்சம் பேர், தேர்வை எழுதுகின்றனர்.வி.ஏ.ஓ., பதவியில் காலியாக உள்ள, 1,870 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, ஜூலையில் டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. இதற்கு, 9.72 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இன்று காலை, 10 - 1 மணி வரை, தேர்வு நடக்கிறது. 4,000 மையங்களில் நடக்கும் தேர்வை, வீடியோவில் பதிவு செய்ய, தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது. பதற்றம் நிறைந்த மையங்களாக கருதப்படும், 150 இடங்களில், "வெப் கேமரா' வழியாக, சென்னையில் இருந்தபடி கண்காணிக்கவும், தேர்வாணையம் ஏற்பாடு செய்துள்ளது.தேர்வில், எவ்வித முறைகேடும் நடக்காத அளவிற்கு, பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும், தேர்வாணையம் எடுத்துள்ளது.
thumbnail

காவிரியில் தண்ணீர் திறப்பு: கர்நாடக அரசு உத்தரவு


உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து சனிக்கிழமை இரவு காவிரியிலிருந்து விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டுள்ளது. காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, தமிழகத்துக்கு அக்டோபர் 15ஆம் தேதி வரை தினமும் விநாடிக்கு 9,000 கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (28.09.2012) உத்தரவிட்டது. இதுகுறித்து விவாதிப்பதற்காக பெங்களூரில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜை முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் சந்தித்துப் பேசினார். அப்போது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அவரிடம் முதல்வர் ஷெட்டர் விளக்கினார். இதையடுத்து, ஆளுநரின் ஆலோசனையின்பேரில் மண்டியா மாவட்டம் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து (கே.ஆர்.எஸ்.) விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க முதல்வர் ஷெட்டர் உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிந்த பின்னர், செய்தியாளர்களிடம் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியது: கர்நாடகத்தில் நிலவும் வறட்சி நிலையை எடுத்துரைத்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாத நிலை உள்ளதை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும். காவிரி ஆணைய உத்தரவை நிறுத்திவைத்து, நிபுணர் குழுவை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமரிடம் முறையிட தீர்மானித்துள்ளோம். மேலும் தொலைநகல் மூலம் மீண்டும் மனு அனுப்பியுள்ளோம் என்றார் அவர். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமரிடம் முறையிடுவது என முடிவு செய்யப்பட்ட நிலையில், கர்நாடக ஆளுநரை முதல்வர் ஷெட்டர் சந்தித்துப் பேசிய பின்னர், காவிரியில் தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது

Saturday, September 29, 2012

thumbnail

'பர்ஃபி' ரீமேக்கில் சிம்புவா? ஜீவாவா


யுடிவி தயாரிப்பில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்து வரும் பர்ஃபி இந்திப்படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. தமிழில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடப்பதாக தகவல்களை வெளியாகி உள்ளன. ரன்பீர்கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா ஆகியோர் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் பர்ஃபி. ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவில் இருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தினை தமிழில் ரீமேக் செய்ய யுடிவி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் ரன்பீர் நடித்த கதாபாத்திரத்தில் சிம்புவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் யுடிவி தயாரிப்பில் வெளியான முகமூடி படத்தில் ஜீவா நடித்து இருந்தார். எனவே பர்ஃபி ரீமேக்கில் ஜீவாவையே நடிக்க வைக்கலாமா என்று அந்த நிறுவனத்தினர் யோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கருத்து கூறியுள்ள சிம்பு, பர்ஃபி சிறந்த படம். மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்த படத்தை இரண்டு முறை நான் பார்த்திருக்கிறேன். இதன் ரீமேக்கில் நடிப்பது குறித்து இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை என்றார். இந்தியில் வெளியான த்ரி இடியட்ஸ், டெல்லி பெல்லி போன்ற திரைப்படங்கள் தமிழில் சமீபத்தில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அந்த வரிசையில் பர்ஃபி படமும் ரீமேக் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
thumbnail

யோகா இந்து மதத்திற்கு உட்பட்டது: பிரிட்டன் சர்ச்சில் தடை

கிறிஸ்துவ மத நம்பிக்கைக்கு ஏற்றதாக இல்லை எனக்கூறி, யோகா வகுப்பு நடத்த பிரிட்டன் சர்ச் தடை விதித்துள்ளது.
பிரிட்டனில் சவுத் ஆம்ப்டன் பகுதியில் உள்ள செயின்ட் எட்மண்ட்ஸ் சர்ச் வளாகத்தில் கோரி விதெல் என்பவர் யோகா வகுப்புகளை நடத்தி வந்தார்.
அவர் பலரிடம் யோகாசன பயிற்சிகளை கற்று வந்தனர். இந்நிலையில் யோகா இந்துக்களின் மத வழிபாட்டு முறைகளில் ஒன்று, கத்தோலிக்க மத நம்பிக்கைக்கு ஏற்றதாக இல்லை எனக்கூறி, யோகா வகுப்புகளை உடனே நிறுத்துமாறு கோரி விதெலுக்கு சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டது.
இதையடுத்து யோகா வகுப்புகளை பாதியிலேயே கைவிட நேர்ந்ததாக கோரி வருத்தப்பட்டார்.
இதுகுறித்து கோரி மேலும் கூறுகையில், யோகாவை மதத்துடன் சம்பந்தப்படுத்தி கூறுவதை இதற்கு முன், நான் கேள்விப்பட்டதே இல்லை.
எனது வகுப்புகளில் தியானம் தொடர்பான விஷயம் எதுவும் இல்லை, யோகா முறைப்படி உடற்பயிற்சிகளை மட்டும் தான் கற்றுத் தந்தோம்.
உடற்பயிற்சிகளை எப்படி மதத்துடன் சம்பந்தப்படுத்துகின்றனர் எனத் தெரியவில்லை என்றார்.
போர்ட்ஸ்மவுத் கத்தோலிக்க பேராயர் அலுவலக தகவல் தொடர்பாளர், யோகாவுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து நிருபர்களிடம் கூறுகையில், கிறிஸ்தவத்துக்கு தொடர்பில்லாத செயல்பாடுகளை கத்தோலிக்க சர்ச் வளாகத்தில் அனுமதிக்க மாட்டோம்.
யோகா என்பது இந்து மத தியானமாக கருதப்படுகிறது. தேசிய அளவில் இது தொடர்பான கொள்கை எதுவும் இல்லை.
இருப்பினும் யோகா தொடர்பாக அந்தந்த சர்ச் பாதிரியார் முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
thumbnail

3,400 கிலோ எடையுள்ள ஜிசாட்,10 செயற்கைகோள் இன்று விண்ணில் பாய்கிறது

இந்தியாவின் அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்,10, ஏரியன்,5 ராக்கெட் மூலம் பிரெஞ்ச் கயானாவிலிருந்து இன்று அதிகாலை விண்ணில் பாய்கிறது. இந்தியாவின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்த ரூ.750 கோடி செலவில் ‘ஜிசாட்,10’ என்ற தகவல் தொடர்பு செயற்கை கோளை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ) உருவாக்கியது. இதில் 12 கு,பாண்ட், 12 சி,பாண்ட், 6 நீட்டிக்கப்பட்ட சி,பாண்ட்  என மொத்தம் 30 டிரான்ஸ்பாண்டர்கள் உள்ளன. இது டி.டி.எச் சேவை உட்பட அனைத்து தகவல் தொடர்பையும் மேம்படுத்தும். இது தவிர உள்நாட்டு விமானபோக்குவரத்துக்கு பயன்படும் ‘ககன்’ என்ற அதிநவீன ஜிபிஎஸ் சிக்னல் நேவிகேஷன் கருவியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோளின் மொத்த எடை 3,400 கிலோ. இஸ்ரோவின் 101வது ஆய்வில் உருவாக்கப்பட்ட இந்த ஜிசாட்,10 செயற்கைகோள், இது வரை தயாரித்ததிலேயே மிக அதிக எடையுடன் கூடிய செயற்கைகோள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயற்கைகோள் பிரான்ஸ் நாட்டின் பிரெஞ்சு கயானா ஏவுதளத்திலிருந்து ஏரியன்,5 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 2.48 மணிக்கு ஏவப்படுகிறது. இதை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஜிசாட்,10 ஏவப்படுவதை நேரில் பார்வையிடுவதற்காக, அதன் திட்ட இயக்குனர் டி.கே.அனுராதா, செயற்கைகோள் தகவல் தொடர்பு மற்றும் நேவிகேஷன் திட்ட இயக்குனர் பிரகலாத ராவ், விண்வெளித்துறையின் கூடுதல் செயலாளர் சீனிவாசன், இஸ்ரோ செயற்கைகோள் மைய இயக்குனர் சிவகுமார் ஆகியோர் பிரெஞ்சு கயானாவில் உள்ளனர். இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், கர்நாடக மாநிலம் ஹாசன் பகுதியில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து ஜிசாட்,10 செயல்பாடை கண்காணிப்பார். ராக்கெட் ஏவப்பட்ட 27 வது நிமிடத்தில் ஜிசாட்,10, புவியின் சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தப்படும். அது உடனடியாக இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கு சிக்னல்களை அனுப்பும். இந்த செயற்கைகோள் 15 ஆண்டுகள் செயல்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
thumbnail

இளைஞர் காங்கிரஸ் தேர்தல்: ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் அதிக அளவில் வெற்றி

தமிழக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. சட்டமன்ற தொகுதி தலைவர்கள், நிர்வாகிகள், பாராளுமன்ற தொகுதி தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கான ஓட்டுக்கள் எண்ணப்பட்டு இரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த தேர்தலில் மத்திய மந்திரி ஜி.கே. வாசன் ஆதரவாளர்களுக்கும், கார்த்தி ப.சிதம்பரம் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 38 பாராளுமன்ற தொகுதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாசன் ஆதரவாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளார்கள். கார்த்தி ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் 12 பாராளுமன்ற தொகுதிகளை கைப்பற்றி இருப்பதாக கார்த்தி ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அணியைச் சேர்ந்தவர்கள் தென் சென்னை, தருமபுரி, திருப்பூர், கடலூர், சிவகங்கை, கடலூர் உள்ளிட்ட தொகுதிகளை கைப்பற்றி உள்ளார்கள். இவை தவிர 3 தொகுதிகளில் எந்த அணியையும் சாராதவர்களும், 3 தொகுதிகளை பிரபு ஆதரவாளர்களும், மாணிக்கம்தாகூர், இளங்கோவன், தங்கபாலு ஆதரவாளர்கள் தலா ஒரு தொகுதியையும் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த முறை 21 தொகுதிகளை கைப்பற்றினோம். இந்த முறை 24 தொகுதிகளை கைப்பற்றி உள்ளோம் என்று வாசனின் ஆதரவாளரும், இளைஞர் காங்கிரஸ் தலைவருமான யுவராஜ் கூறினார். சட்டமன்ற தொகுதி அளவிலும் அதிக தொகுதிகளை வாசன் ஆதரவாளர்களும், அதற்கு அடுத்ததாக கார்த்தி ப.சிதம்பரம் ஆதரவாளர்களும் கைப்பற்றி உள்ளனர். முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் மரணம் அடைந்ததால் திருச்சி தொகுதி ஓட்டுகள் எண்ணிக்கை இன்று மாலை நடக்கிறது.
thumbnail

எஸ்.எச்.கபாடியா ஓய்வு பெற்றார்: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் பதவி ஏற்றார்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.எச்.கபாடியா நேற்று ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக் கொண்டார்.
 
ஜனாதிபதி மாளிகையில் நடந்த எளிய நிகழ்ச்சியில் அவருக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர்.
 
புதிய தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர். 1948-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். கொல்கத்தா பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பும், வக்கீல் படிப்பும் படித்து 1973-ல் வக்கீலாக பணியாற்ற தொடங்கினார்.
 
1990-ல் கொல்கத்தா ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005-ல் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகவும், அதே ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.இவர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக 9 மாதங்கள் பதவி வகிப்பார். 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெறுகிறார்.
 
முன்னதாக நேற்று ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியாவுக்கு பிரிவுபசார விழா நடந்தது. அப்போது பேசிய கபாடியா, புதிய தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், ஆபிரகாம் லிங்கன் போன்றவர் என்று புகழாரம் சூட்டினார்.
thumbnail

கிரானைட் குவாரி முறைகேடு: துரை தயாநிதியை கைது செய்ய போலீஸ் தீவிரம்

மதுரை மேலூர் பகுதியில் கிரானைட் கற்கள் தோண்டி எடுத்ததில் ரூ.16 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட 40 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
பி.ஆர்.பழனிச் சாமியின் மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், சிந்து கிரானைட் அதிபர் செல்வ ராஜ், அவரது மகன் சூரிய பிரகாஷ், ஒலிம்பஸ் கிரானைட் இயக்குநர்கள் மத்திய மந்திரி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி மற்றும் நாகராஜன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
இவர்களை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  துரை தயாநிதி மதுரையில் உள்ள கட்சி பிரமுகர்கள் வீடுகளில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து நேற்று மு.க.அழகிரியின் மகள் கணவரின் சகோதரர் தீபக், அவரது தந்தை ரத்தினவேல் ஆகியோரை விசாரணை நடத்துவதற்காக போலீசார் அழைத்து சென்றனர். ரத்தினவேலுவிடம் விசாரணை நடத்திய போது அவரது வீட்டில் துரை தயாநிதி இல்லை என தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் தீபக்கிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் இருந்து சரியான பதில் கிடைக்காததால் விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டது. துரை தயாநிதி தற்போது எங்கு இருக்கிறார் என்பது பற்றி தெரியவில்லை என்று அவர் கூறினார்.
இதற்கிடையில் நாக மலைப்புதுக்கோட்டையை சேர்ந்த சீனிவாசன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் உள்பட பலரது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இங்கும் இல்லாததால் அண்ணாநகர், வில்லாபுரம், கரிமேடு உள்பட பல இடங்களில் வசித்து வரும் முக்கிய தி.மு.க. பிரமுகர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆனாலும் துரைதயாநிதி சிக்கவில்லை.
கொடைக்கானலில் உள்ள அழகிரியின் பங்களா வீட்டில் பதுங்கி இருக்கலாம் என்ற தகவலின் அடிப்படையில் ஒரு தனிப்படை போலீசார் அங்கு சென்று ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து மதுரைக்கு நேற்று விமானம் மூலம் மத்திய மந்திரி மு.க.அழகிரி மதுரை வந்தார். அவரை தி.மு.க. வக்கீல்கள் சந்தித்து பேசினர். துரைதயாநிதியை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக மு.க.அழகிரியிடம் வக்கீல்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணனிடம் கேட்ட போது கூறியதாவது:-
துரைதயாநிதி இருப்பிடம் குறித்து அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இதுவரை அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. துரை தயாநிதியின் நண்பர்கள் யார் யார்? என்று விசாரித்து வருகிறோம். அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தப்படும்.
மத்திய மந்திரி மு.க.அழகிரி வீட்டில் துரைதயாநிதி இருப்பதாக உறுதியான தகவல் கிடைத்தால் அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தி விசாரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பி.ஆர்.பழனிச்சாமியின் மகன்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார் உள்பட தலைமறைவாக இருப்பவர்களை பிடிக்க மற்றொரு தனிப்படை சிவகங்கை, விருது நகர், பெங்களூர் ஆகிய பகுதிகளுக்கு விரைந்துள்ளது.

Friday, September 28, 2012

thumbnail

தமிழகத்துக்கு தண்ணீர் விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவு

தமிழ்நாட்டுக்கு 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங் பிறப்பித்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் ஆணையத்தின் தலைவரான பிரதமரின் உத்தரவை செயல்படுத்த மறுப்பதற்காக கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
பிரதமரின் உத்தரவுப்படி, தமிழகத்துக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், அக்டோபர் 15-ம் தேதி வரை தினசரி விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 19-ம் தேதி, பிரதமர் தலைமையில் நடந்த காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தில், தமிழகம், கர்நாடகம் மற்றும் புதுவை முதலமைச்சர்களும், கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் பங்கேற்றார்கள்.
தமிழ்நாடு அரசு, 30 நாட்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டிஎம்சி தண்ணீராவது வேண்டும் என்று கேட்டது. ஆனால், கர்நாடகம் மறுத்துவிட்டது. அதையடுத்து, ஆணையத்தின் தலைவர் என்ற முறையில், செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15 வரை தமிழ்நாட்டுக்கு விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு பிரதமர் உத்தரவிட்டார். ஆனால் அது சாத்ததியமில்லை என்று கூறிய கர்நாடக முதல்வர், அந்த உத்தரவுக்கு எதிராக வெளிநடப்புச் செய்தார். அதே நேரத்தில், 9 ஆயிரம் கனஅடி நீர் என்பது எதற்குமே போதாது என தமிழகமும் அதை ஏற்க மறுத்தது.
இந்நிலையில், தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடியது. 24 நாட்களுக்கு தினசரி 2 டிஎம்சி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரியது.
அந்த மனு, நீதிபதிகள் டி.கே. ஜெயின் மற்றும் மதன் லோகுர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, பிரதமரின் உத்தரவை செயல்படுத்த மறுப்பது ஏன் என்று நீதிபதிகள் கர்நாடக அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்கள்.
கோரிக்கை
கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுவதாகவும், அணைகளில் போதிய தண்ணீர் இல்லை என்றும் கர்நாடக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால் அந்த விளக்கத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். 'உயர்ந்த அதிகாரம் படைத்த பிரதமரின் உத்தரவை செயல்படுத்த முடியாது என்று கூறுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என்று கூறிய நீதிபதிகள், அக்டோபர் 15 வரை விநாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம், தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகத்துக்கு உத்தரவிட்டார்கள்.
அதே நேரத்தில், தினசரி 2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடக் கோரி தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு தொடர்பாக ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பிரதமர் உத்தரவிட்ட பிறகும் அதை செயல்படுத்தாமல் இருந்தது ஏன் என்பது குறித்தும் பதிலளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக அரசின் சார்பில், மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் வாதிடும்போது, 9 ஆயிரம் கனஅடி நீர் போதுமானது அல்ல என்றும் 2 டிஎம்சியாவது வேண்டும் என்று கோரினார். ஆனால், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்தாலோசித்துத்தான் பிரதமர் இந்த முடிவை எடுத்திருப்பார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஆனால், பற்றாக்குறை காலத்தில் தங்களுக்கு வர வேண்டிய நியாயமான அளவைத்தான் தமிழகம் கோருவதாக வைத்திநாதன் சுட்டிக்காட்டினார்.

Thursday, September 27, 2012

thumbnail

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் : இந்தியா – ஆஸ்திரேலியா மோதல்

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று 2 போட்டிகள் நடைபெறவுள்ளன. சூப்பர் – 8 சுற்றில் இரண்டாவது பிரிவில் இடம் பெற்றுள்ள தென்னாப்ரிக்காவும், பாகிஸ்தானும் முதல் போட்டியில் விளையாடவுள்ளன. இந்தப் போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில்  பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்குகிறது.
இதே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் இரண்டாவது ஆட்டத்தில், இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இரு  அணிகளும் லீக் சுற்றில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன், இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியைப் பொறுத்தவரை  அஸ்வின், ஹர்பஜன் சிங்  , பாலாஜி ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். பேட்டிங்கில் சேவாக், கம்பீர் ஆகிய இருவரும் எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்வில்லை. இன்றைய போட்டியில் 5 பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கும் எனத் தெரிகிறது.
thumbnail

நபிகள் நாயகத்தை விமர்சிக்கும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தின் தயாரிப்பாளர் கைது

நபிகள் நாயகத்தை விமர்சிக்கும் படத்தை தயாரித்த நகோலா பேஸ்லி (Nakoula Besseley) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த அவருக்கு, கடந்த 2010ம் ஆண்டு தொடப்பட்ட வழக்கு ஒன்றில் 21 மாத சிறைத் தண்டனையுடன், இணையதளத்தை பயன்படுத்த 5 ஆண்டு கால தடையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடையை நகோலா பேஸ்லி 8 முறை மீறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள நகோலா பேஸ்லிக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கலாம் என்று தெரிகிறது. இணையதளத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால், நகோலா பேஸ்லி வேறு பெயரில் You Tube-இல் நுழைந்து, முகமது நபிகளை விமர்சிக்கும் திரைப்படத்தை பதிவேற்றம் செய்ததாக புலனாய்வுத் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
thumbnail

நெல் கொள்முதல் விலை அதிகரிப்பு : தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

மத்திய அரசு அண்மையில் அறிவித்த நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையைக் காட்டிலும் தமிழக விவசாயிகளுக்கு கூடுதல் கொள்முதல் விலை தரப்படும் என்று முதலமைச்சர் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதாரண நெல்லுக்கு மத்திய அரசு அறிவித்த 1,250 ரூபாயுடன் தமிழக அரசு சார்பில் 50 ரூபாய் சேர்த்து 1,300 ரூபாய் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. சன்ன ரக நெல்லுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள 1,280 ரூபாயுடன் 70 ரூபாய் கூடுதலாக 1,350 ரூபாய் கொள்முதல் விலையாக விவசாயிகளுக்கு தரப்படும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா உள்பட தமிழகம் முழுவதும் தேவைக்கேற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உடனுக்குடன் அனுமதி வழங்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
thumbnail

நேபாளத் தலைநகர் காத்மண்டு அருகே நிகழ்ந்த விமான விபத்தில் 19 பேர் பலியாகினர்

நேபாளத் தலைநகர் காத்மண்டு அருகே நிகழ்ந்த விமான விபத்தில் 19 பேர் பலியாகினர். சிதா ஏர் (SITA  AIR) என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம், காத்மண்டிலிருந்து, எவரஸ்ட் சிகரப் பகுதியிலுள்ள லுக்லா (LUKLA) என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது.
இமயமலையில் மலையேற்றம் மற்றும் சுற்றுலாவுக்கு வந்திருந்த வெளிநாட்டுப் பயணிகள் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தனர். விமானம் காத்மண்டிலிருந்து கிளம்பிய இரண்டு நிமிடத்தில் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து நடந்த இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 16 பயணிகள் உள்ளிட்ட 19 பேரும் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீப் பிடித்ததற்காக காரணம் உடனடியாக தெரியவில்லை. கடந்த மே மாதம் நேபாளத்தில் இதேபோன்று நிகழ்ந்த விமான விபத்தில், 15 பேர் உயிரிழந்தனர். அதில், ரஸ்னா விளம்பரத்தில் நடித்து தருணி சச்தேவ் என்ற குழந்தை நட்சத்திரம் உயிரிழந்தார்.
thumbnail

சார்ஸ் வைரஸை ஒத்த புதிய கிருமி: மருத்துவர்கள் எச்சரிக்கை

2003-இல் உலகின் பலபாகங்களிலும் பரவி நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்படக் காரணமான சார்ஸ் வைரஸ் நோயை ஒத்த புதிய சுவாசநோய் ஒன்றை பிரிட்டனில் சிகிச்சையளிக்கப்படும் நபர் ஒருவரிடமிருந்து மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
கட்டாரிலிருந்து விமான-ஆம்பியூலன்ஸ் மூலம் லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டுவரப்பட்ட 49 வயது ஆண் ஒருவரிடம் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இதேவிதமான சுவாசத்தைப் பாதிக்கின்ற வைரஸொன்று சவூதி அரேபியாவில் உள்ள ஒரு நோயாளியிடம் கண்டுபிடிக்கப்பட்டது, அதன்பின்னர் அவர் உயிரிழந்துவிட்டார்.
இந்த புதிய வைரஸால் என்ன வகையான ஆபத்து உண்டாகலாம் என்று நிபுணர்கள் ஆராய்ந்துவருகிறார்கள்.
இந்த தகவலின் பின்னர், உலக சுகாதார ஸ்தாபனமும் இதுவரை எந்தவிதமான வெளிநாட்டுப் பயணக் கட்டுப்பாட்டுகளையும் விதிக்கவில்லை.
இதேவேளை, உலகில் 2 பேரிடம் இந்த வைரஸ் இதுவரை அவதானிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் இல்லை என்றும் பிரிட்டனின் சுகாதார பாதுகாப்பு நிறுவனத்தில் சுவாசநோய்கள் சம்பந்தப்பட்ட பிரிவுக்குத் தலைவராக உள்ள பேராசிரியர் ஜோன் வொட்சன் கூறினார்.
சுகாதாரத்துறைப் பணியாளர்களுக்காக இந்த நோய் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுவருவதாகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
thumbnail

நோக்கியா நிறுவனத்துக்கு எதிராக சென்னையில் ஆர்பாட்டம்

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சீமென்ஸ் நோக்கியா நிறுவனத் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுகிறார்கள் எனக் குற்றஞ்சாட்டி, இந்நிலை மாறவேண்டும் என வலியுறுத்தி, நோக்கியாவின் தலைமையகம் ஃபின்லாந்து நாட்டில் அமைந்திருப்பதால், சென்னையில் உள்ள அந்நாட்டுத் துணை தூதரகத்தின் முன் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க பிரிவான சிஐடியூவின் சார்பில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற அணித்தலைவர் ஏ.சௌந்திரராஜன் தமிழக அரசு தலையிட்டு தொழிலாளர்களின் குறைகளைத் தீர்க்கவேண்டும் என வலியுறுத்தினார்.
 ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்திருக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அவற்றுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் இந்திய நிறுவனங்களில் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் வரை பணிபுரிகின்றனர் என்றும் அவர்களில் 80 சதமானோர் ஒப்பந்தப்பணியாளர்களாக இருப்பதால் அவர்களுக்கு எந்தவித உரிமைகளும் அளிக்கப்படுவதில்லை என்றும் கூறினார்.
அவர்களுக்கு மிகக்குறைவான ஊதியமே வழங்கப்படுகிறது,, இந்நிலை தொடருமானால் கொந்தளிப்பு ஏற்படக்கூடும், அப்படி நிகழாமல் பார்த்துக்கொள்வது தமிழக அரசின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்று தற்போது மனிதவளத்துறை தொடர்பான ஆலோசனைகள் வழங்கிவரும் ஜி.எஸ் ரமேஷ் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டால் இங்கு வேலைவாய்ப்பைப் பெருக்கவே பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகின்றன, அவை இங்கு கால் பதிப்பதால் நம் நாட்டு பொருளாதார வளமும் கூடுகிறது என்பதை மனதில் கொள்ளவேண்டும் என்றார். தவிரவும் உற்பத்திச் செலவைக் குறைத்தால்தான் இலாபத்தைப் பெருக்க முடியும் என்ற நிலையில் பல்வேறு அணுகுமுறைகளை நிர்வாகங்கள் கைக்கொள்வது தவிர்க்கவியலாதது, உலகப் பொருளாதாரம் செழிக்கும்போது இயல்பாகவே இங்கும் ஊதியம் உயரும், அதே நேரம் தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு உருவாகாத வண்ணம் நிர்வாகங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
தமிழக அரசு சார்பாக இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.
thumbnail

"உரிய பாதுகாப்பில்லாவிட்டால் அணுஉலையை மூடுவோம்" உச்சநீதிமன்றம்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஏற்பாடுகள் தமக்கு திருப்தியாக இல்லாவிட்டால், அதன் உரிமத்தை ரத்து செய்வதற்கும் தயங்க மாட்டோம் என்று இந்திய உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அளித்த 17 பரிந்துரைகளில் இன்னும் 11 பரி்ந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை, முறையான சுற்றுச்சூழல் அனுமதியில்லை என்ற அம்சங்களின் அடிப்படையிலும், அணு உலை விபத்து ஏற்பட்டால் வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, சென்னை உயர்நீதிமன்றம் அந்த அணுமின் நிலையத்துக்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள், நீதிபதிகள் ராதாகிருஷ்ணன் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குத் தொடர்ந்த அமைப்புக்களில் ஒன்றான பூவுலகின் நண்பர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அந்த அணுமின் நிலையத்துக்கு முறையான சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
அந்த அணு உலைக்கு முதலில் 1989-ல் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது. ஆனால் 1998-ல் அந்த ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டது. 1989 ஒப்பந்தப்படி, கூடங்குளம் அணு மின் நிலையத்தை அமைத்துக் கொடுக்கும் ரஷ்யாவுக்கே அணுக்கழிவுகளைக் கொண்டு செல்வது என்று இருந்தது. ஆனால், 1998 ஒப்பந்தப்படி, கூடங்குளத்திலேயே அவை புதைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முதலில் பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவருவது என இருந்த முடிவு, பின்னர் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின்கீழ் அங்கு தண்ணீர் கொண்டுவரப்படும் என்று மாற்றப்பட்டது. ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்குப் பிறகும் புதிய அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும், ஆனால், இதில் அவ்வாறு பெறப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், அணு உலைக்குச் செல்லும் நீரின் வெப்ப நிலை, அங்கிருந்து வெளியேற்றப்படும் நீரின் வெப்ப நிலை, பின்னர் மாற்றப்பட்டிருக்கிறது. அதற்கும் புதிதாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
அப்போது கருத்து வெளியிட்ட நீதிபதிகள், "இந்தத் திட்டத்துக்கு எவ்வளவு கோடி மூதலிடு செய்திருந்தாலும் கவலையில்லை. மக்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்தான் முக்கியமானது. பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களில் திருப்தியடையாவிட்டால், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு வழங்கப்பட்ட உரிமரத்தை ரத்து செய்வதற்கும் தயங்க மாட்டோம் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.
அக்டோபர் 4-ம் தேதி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் ஆஜராகி, சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான விவரங்களைத்த தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கியது என்று நீதிமன்றம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்குப் பதிலளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை அக்டோபர் 4-ம் தேதி நடைபெற உள்ளது.
thumbnail

வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் மத்திய பிரதேசப் பொலிஸார் கைது செய்து,பின்னர் விடுதலை-


மத்தியப் பிரதேச மாநிலத்தில் விதிஷா நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சாஞ்சியில் செப்டம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற சர்வதேச தரத்திலான புத்தமத மற்றும் அறிவுசார் பட்டப்படிப்புக்களை கற்பிக்கவிருக்கும் தர்ம தம்ம பல்கலைக்கழக திறப்பு விழாவில் பங்கேற்க சிறிலங்காவின் ஜனாதிபதி ராஜபக்சாவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இதில் வேடிக்கை என்னவெனில், இம்மாநிலத்தை ஆளுவது பாரதிய ஜனதா தளம். இம்மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங்க் சவுகானின் அனுமதியின்றி இந்திய நடுவண் அரசு செயற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆக இந்தியாவின் இரு பிரதான கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் தமிழர்களுக்குத் தொடர்ந்தும் தீங்குகளையே விளைவித்து வருகிறார்கள் என்பது இதிலிருந்து நன்கே தெரிகிறது. தமிழகத்தில் இருந்து எதிர்ப்பலைகள் கிளம்பியதும், சவுகானின் ஒப்புதல் பெறாமல்தான் இந்திய நடுவண் அரசு மகிந்தாவை வரவழைத்துள்ளது என்று பா.ஜ.கட்சியினர் கூறி வருகிறார்கள். வை.கோ தலைமையில் ஆயிரத்துக்கும் அதிகமான ம.தி.மு.கவினர் மத்தியப் பிரதேசம் சென்று தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். நிகழ்ச்சி இடம்பெற்ற இடத்துக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டாலும் ம.தி.மு.கவினர் மத்தியப் பிரதேச எல்லையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஈழ பிரச்சனை தமிழர்களை காட்டுமிராண்டி தனமாக கொன்று குவித்த மஹிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிந்த்வாராவில் 3 நாட்களாகப் போராட்டம் நடத்திய மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும் அவரது ஆதரவாளர்களையும் மத்திய பிரதேசப் பொலிஸார் கைது செய்து,பின்னர் விடுதலை செய்தது மட்டுமல்லாது பொலிஸார் வைகோவிற்கு மாலை அணிவித்து மரியாதையாக வழியனுப்பி வைத்தனர். போராட்டம் நடத்தச் சென்ற வைகோவை, மத்திய பிரதேச மாநில எல்லையான சிந்த்வாராவில் பந்துர்னா அருகில் உள்ள கட்சிகோலி என்ற இடத்தில் பொலிஸார் தடுத்த நிறுத்தனர். 40 மணிநேரமாக தடுத்து வைக்கப்பட்ட இடத்திலே உண்டு உறங்கி தொடர் போராட்டங்களை வைகோ நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை காலையில் சிந்த்வாராவில் ராஜபக்சவின் உருவ பொம்மையை எரித்துவிட்டு சாஞ்சி நோக்கி தமது தொண்டர் படையுடன் வைகோ புறப்படத் தயாரானார். அப்போது வைகோ மற்றும் அவரது தொண்டர்களை முன்னேறவிடாமல் தடுத்த மத்திய பிரதேச மாநில பொலிஸார் அனைவரையும் கைது செய்தனர். அங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமண மண்டபத்தில் அனைவரையும் தங்க வைத்தனர். இதன் பின்னர் சில மணிநேரம் கழித்து வைகோவை விடுதலை செய்த பொலிஸார் அவருக்கு மாலை அணிவித்து மரியாதையாக வழியனுப்பி வைத்தனர்.

Wednesday, September 26, 2012

thumbnail

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு இன்று கூடுகிறது

புதுடெல்லி,செப்.27-
 
மத்திய அரசு சமீபத்தில் டீசல் விலையை உயர்த்தியதோடு, சமையல் கியாஸ் சிலிண்டர் சப்ளைக்கும் கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. அத்துடன், சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டையும் அனுமதித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டும் இன்றி ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள சில கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் விலகியது. அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றுக் கொண்டது.
 
மராட்டிய மாநிலத்தில் காங்கிரஸ்-சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு துணை முதல்-மந்திரியாக பதவி வகித்த தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அஜித் பவார் மீது ரூ.20 ஆயிரம் கோடி ஊழல் புகார் கூறப்பட்டதால், அவர் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு அரசியல் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.
 
இந்த நிலையில், சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இது மம்தா பானர்ஜி கூட்டணியை விட்டு விலகிய பிறகு நடைபெறும் முதல் கூட்டம் ஆகும். இந்த கூட்டத்தில், கூட்டணியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் வெளியேறியதால் எழுந்துள்ள சூழ்நிலை, மராட்டிய மாநில விவகாரம், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இருந்து வரும் சவால்கள் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
 
மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு காங்கிரஸ் காரியகமிட்டி நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்த நிலையில், இன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு கூடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அஜித் பவார் ராஜினாமா விவகாரத்தை உங்கள் கட்சி கிளப்புமா? என்று தேசியவாத காங்கிரசின் துணைத்தலைவரும் மத்திய மந்திரியுமான பிரபுல் பட்டேலிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், 'இல்லை' என்று பதில் அளித்தார்.   
thumbnail

குவைத்தில் கைதான ஆயிரம் இந்திய தொழிலாளர்கள் கதி என்ன?

 
குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய தொழிலாளர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தடுப்பு முகாம்கள் மற்றும் 40 போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை திரும்ப அழைத்து கொள்ளுமாறு அவர்களை பணியில் சேர்த்து விட்ட ஏஜெண்டுகளுக்கு குவைத் அதிகாரிகள் தகவல் அனுப்பி உள்ளனர்.
 
இந்நிலையில், கைதான இந்திய ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாகவும், அவர்கள் துன்புறுத்தப்பட்டதாக எந்த புகாரும் இல்லை என்றும் குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி விது நாயர் தெரிவித்துள்ளார். யாரும் இதுவரை நாடு கடத்தப்படவில்லை என்றும், அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்றும் அவர் கூறினார்.
thumbnail

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கைகொடுத்த காற்றாலைகள்: 3600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி

சென்னை, செப்.27-
 
தமிழகத்தின் மின்தேவை 11,500 மெகாவாட் முதல் 12 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் காற்றாலையிலிருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவில், ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பரவலாக பலத்த மழை பெய்ததால் காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக 3,600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
 
இதனால் பற்றாக்குறையில் இருந்த மின்சார வாரியத்திற்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. இதனால் ஓரளவு மின்தடை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. வானிலை ஆராய்ச்சி மையம் தொடர்ந்து மழை இருக்கும் என்று அறிவித்துள்ளதால் காற்றாலைகளால் போதிய மின்சாரம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
 
இதனால் மின்தடை நேரமும் குறைக்கப்படலாம். மத்திய மற்றும் மாநில புதிய மின்திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது தமிழ்நாட்டின் மின்நிலைமை முழுமையாக சீரடையும். அதுவரை காற்றாலைகள், மழை மற்றும் அணையில் உள்ள தண்ணீரை நம்பி தான் இருக்க வேண்டி உள்ளது.
 
அதுவும் ஓரிரு நாட்களில் காற்றாலைகளிலிருந்து பெறப்படும் மின்சாரமும் குறைந்து விடும். அதற்கு பிறகு சுமார் மூன்று வாரங்களுக்கு பிறகு தான் வடகிழக்கு பருவ மழை பெய்யும். அப்போது தான் மின்உற்பத்தி சற்று அதிகரிக்கும். அதுவரை மின்சாரத்திற்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.
thumbnail

கேம்பஸ் இண்டர்வியு மூலம் ஐ.ஐ.டி. மாணவர்களை பொது நிறுவனங்கள் தேர்வு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: ஐகோர்ட்டு உத்தரவு



சென்னை, செப்.27-

ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிலையங்களில் இருந்து மாணவர்களை அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் நேரடியாக தேர்வு செய்யக்கூடாது என்று பிறப்பிக்கப்பட்ட தடையை விலக்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம். போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவர்களை, மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் நேரடியாக (கேம்பஸ் இண்டர்வியு) தங்கள் நிறுவன ஊழியர்களாக தேர்வு செய்கின்றன. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் பழனிமுத்து மனுதாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாளர் தேர்வுக்காக சட்டங்கள் உள்ளன. இடஒதுக்கீட்டு முறை உள்ளது. மேலும், அரசுப் பணிகளுக்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பலர் பெயர் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு அரசு மற்றும் பொது நிறுவனங்கள் நேரில் சென்று பணியாளர்களை தேர்வு செய்வது சட்ட விரோதமானது. இப்படி ஆட்களை தேர்வு செய்வதால், வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் மற்றவர்களின் உரிமை பாதிக்கப்படும்.

 எனவே ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் கேம்பஸ் இண்டர்வியு நடத்த அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். கேம்பஸ் இண்டர்வியுவில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வேலை வழங்கக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஐ.ஒ.சி., இந்துஸ்தான் பெட்ரோலியம், சென்னை ஐ.ஐ.டி. உள்பட பல நிறுவனங்கள் பிரதிவாதிகளாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர்.

இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யும்படி பிரதிவாதிகளுக்கு நீதிபதிகள் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தனர். ஆனால் கடந்த பிப்ரவரி 21-ந் தேதி வழக்கு விசாரணையின்போது பிரதிவாதிகள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்படவில்லை.

அதைத் தொடர்ந்து, அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், இதுபோன்ற கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியு நடத்தக் கூடாது என்பதில் ஏற்கனவே இருந்த நிலை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்த வழக்கின் மனுதாரர் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இண்டர்வியுவில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் பலரும் வழக்கில் இணைக்கப்பட்டுள்ளனர்.

தகுதியின் அடிப்படையில்தான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்றும் வேலைக்காக அவர்கள் காத்திருக்கின்றனர் என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

 பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அனைத்து காலியிடங்களையும் கேம்பஸ் இண்டர்வியு மூலம் நிரப்புவதில்லை என்றும் பிரபலமான கல்வி நிறுவனங்களில் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் இண்டர்வியு நடத்தி மிகச் சில மாணவர்களை மட்டும் தேர்வு செய்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, இந்த சூழலில் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீடித்தால் மாணவர்களுக்கு தேவையில்லாத இன்னல் ஏற்படும் என்று கருதுகிறோம். எனவே தடையை நீக்கி உத்தரவிடுகிறோம்.

இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட பிறகு செய்யப்பட்ட நியமனம் அனைத்தும் மனுவின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மாணவர்கள் சார்பாக வக்கீல் பிரியா ரவி ஆஜராகி வாதாடினார்.
thumbnail

ஊழல்களால் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலாக உள்ளது மத்திய அரசு : பா.ஜ., கருத்து



ஊழல் விவகாரங்களில் சிக்கியுள்ள மத்திய அரசு மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பல் என பாரதிய ஜனதா கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நடை‌பெற்று வருகிறது. இதில் நிதின் கட்கரி, அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாரதிய ஜனதா மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத், மத்திய அரசு எந்த நேரமும் கவிழும் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் சூழலில் மக்களவைக்கு எந்த நேரமும் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகளை மிரட்டி ஆதரவை பெற சிபிஐ.யை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டினார்.
thumbnail

கணினி களின் விற்பனையை குறைக்கும் Windows 8: நிறுவனங்கள் குற்றச்சாட்டு

Windows 8 Operating System வெளிவர இருப்பதால், Personal Computer-களின் விற்பனை மிக மோசமாக இருப்பதாக முன்னணி நிறுவனங்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
கணனிகளை தயாரித்து விற்பனை செய்திடும் முன்னணி நிறுவனங்களான Dell மற்றும் H.P நிறுவனங்களே இக்கருத்தை தெரிவித்துள்ளன.
தங்களுடைய விற்பனை குறித்துப் பேசுவதற்கான கருத்தரங்கில் Dell நிறுவன அதிகாரிகள், Windows 8 Operating System வெளியிட இருப்பதுவே, கணனி விற்பனை குறைந்திட காரணம் என நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார்.
H.P நிறுவனம் பெயர் குறிப்பிடாமல் குற்றம் சாட்டியுள்ளது. புதிதாக பல்வேறு வசதிகளுடன் கூடிய இயங்குதளம் வரவிருப்பதால் Personal Computer-களின் விற்பனை மந்த நிலையை அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
thumbnail

தண்ணீரில் மிதக்கும் அசாம் : ஜப்பானுக்கு சுற்றுலா சென்றுள்ள முதல்வர்

குவகாத்தி, செப்., 26 : அசாம் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் தற்போது வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. 15 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். 12 பேர் வெள்ளத்தில் மூழ்கி பலியாயினர். 3 பேரை காணவில்லை.அசாம் மாநிலத்தில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுவும், ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படையும் மீட்புப் பணிகளை செய்து வருகின்றன.அசாம் மாநிலம் மோசமான நிலையில் இருக்கும் போது, அதன் முதல்வர் தருண் கோகோய், ஜப்பானில் குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
thumbnail

அ‌க்டோப‌ர் 15 முத‌ல் பெ‌ட்ரோ‌ல்‌ ப‌ங்‌க் 8 ம‌ணி நேர‌ம்தா‌ன் செய‌ல்படு‌ம்!

ச‌ெ‌ன்னை‌யி‌ல் அ‌க்டோப‌ர் 15ஆ‌ம் தே‌தி முத‌ல் 8 ம‌ணி நேர‌ம் வரை ம‌ட்டுமே பெ‌ட்ரோ‌ல் - ‌டீச‌ல் ப‌ங்‌க்குக‌ள் ‌திற‌ந்‌திரு‌க்கு‌ம் எ‌ன்று த‌மி‌ழ்நாடு பெ‌‌ட்ரோ‌ல் வ‌ணிக‌ர்க‌ள் ச‌ங்க‌ம் அ‌றி‌‌வி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் தெ‌ரி‌வி‌த்த த‌மி‌ழ்நாடு பெ‌‌ட்ரோ‌ல் வ‌ணிக‌ர்க‌ள் ச‌ங்க‌ ‌நி‌ர்வா‌கிக‌ள், த‌ற்போது, 1000 ‌‌லி‌ட்ட‌ர் பெ‌ட்ரோலு‌க்கு அ‌ளி‌க்கு‌ம் க‌மிஷனை 1,495 ரூபா‌ய் இரு‌ந்து 1,607 ரூபாயாக உய‌ர்‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று அவ‌ர்க‌ள் கோ‌‌ரி‌க்கை வை‌த்தன‌ர்.

பெ‌ட்ரோ‌‌ல், டீச‌லு‌க்காக எ‌ண்ணெ‌ய் ‌நிறுவன‌ங்க‌ள் அ‌‌ளி‌க்கு‌ம் க‌மிஷனை உய‌ர்‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்ற கோ‌‌ரி‌க்கையை வ‌லியுறு‌த்‌தி அ‌க்டோப‌ர் 1, 2 ஆ‌கிய தே‌திக‌ளி‌ல் பெ‌ட்ரோ‌ல் - டீச‌ல் கொ‌ள்முதலை ‌நிறு‌த்த முடிவு செ‌ய்து‌ள்ளதாக அவ‌ர்க‌‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

கோ‌ரி‌க்கைக‌ள் புற‌க்க‌ணி‌க்க‌ப்ப‌ட்டா‌ல் அ‌க்டோப‌ர் 15ஆ‌ம் தே‌தி முத‌ல் பெ‌‌ட்ரோ‌ல் ப‌ங்‌க் செய‌ல்படு‌ம் நேர‌த்தை 8 ம‌ணியாக குறை‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று த‌மி‌ழ்நாடு பெ‌‌ட்ரோ‌ல் வ‌ணிக‌ர்க‌ள் ச‌ங்க‌ ‌நி‌ர்வா‌கிக‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

பெ‌‌ட்ரோ‌ல் வ‌ணிக‌ர்க‌ள் ச‌ங்க‌‌த்‌தி‌ன் இ‌‌ந்த அ‌றி‌வி‌ப்பா‌ல் ‌வியாபா‌ரிக‌ள், பொதும‌க்க‌ள் உ‌ள்‌ளி‌ட்டவ‌ர்க‌ள் பா‌தி‌க்க‌ப்படு‌ம் ‌அபாய‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது.
thumbnail

மின் வெட்டை கண்டித்து இந்திய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

மின்வெட்டை கண்டித்து இந்திய ஜனநாயக கட்சி தமிழ்நாடு முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து கட்சியின் நிர்வன தலைவர்  பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களாக மின்சார தட்டுப்பாடு அதிகம் ஏற்பட்டுள்ளது. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் பகல் மட்டுமின்றி இரவிலும் மின்சாரம் இல்லாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறைந்தது 10 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதால் தொழில்கள் பெருமளவு பாதிக்கிறது.
இதை கண்டித்து நாளை தமிழகம் முழுவதும் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு பாரிவேந்தர் கூறி உள்ளார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர் முத்தமிழ்ச் செல்வன் விரிவாக செய்து வருகிறார். தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சீபுரம் உள்பட அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பும் காலை 10 மணிக்கு நடைபெறும் போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் முத்தமிழ்ச்செல்வன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tuesday, September 25, 2012

thumbnail

இந்தியாவில் அறிமுகமாகும் வோக்ஸ்வாகனின் 'டவ்ரக்'

 இந்தியாவில் அறிமுகமாகும் வோக்ஸ்வாகனின் 'டவ்ரக்'


சென்னை, செப்.25 (டிஎன்எஸ்)ஸ்போர்ட்ஸ் யுடிலிட்டி வைக்கிள் எனப்படும் 'எஸ்.யு.வி' கார்களுக்கு இந்தியர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்பதை புரிந்துகொண்ட வோக்ஸ்வாகன் நிறுவனம் விரைவில் தனது 'டவ்ரக்' என்ற எஸ்.யு.வி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.

இந்த கார், வெளிநாட்டில் உற்பத்தி செய்யபப்ட்டு, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யபப்ட இருக்கிறது. எனவே இதன் விலை ரூ.58.4 லட்சம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

3.0 லிட்டர், 6 சிலிண்டர் டீஸல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. கீலெஸ் என்ட்ரி, சன்ரூஃப் புளூடூத் ஆடியோ சிஸ்டம், டட்-ஸ்கிரீன் ஆடியோ சிஸ்டம், காரை ரிவர்ஸில் எடுக்க உதவும் ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட பல வசதிகள் கொண்ட இந்த காரில் ஐந்து இருக்கைகள் இருக்கிறது.

4 வீல் டிரைவ்  வசதி கொண்ட இந்த காரில் பயணிகள் அனைவருக்கும், ஏர் பேக் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. வோக்ஸ்வாகன் நிறுவனம் விற்பனை செய்யும் கார்களில் அதிகமான விலை கொண்ட இரண்டாவது கார் 'டவ்ரக்' என்பது குறிப்பிடத்தக்கது.
thumbnail

தமிழகத்தில் மின்வெட்டு தீவிரமடைகிறது




தமிழகத்தில் மின் வெட்டு தீவிரமடைகிறது
தமிழகத்தில் மின் வெட்டு தீவிரமடைகிறது
தமிழகத்தில் மின் பற்றாக்குறை மேலும் மேலும் மோசமடைந்து வருகிறது. சென்னையைத் தவிர்த்த மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மின்வெட்டு 10 மணிநேரத்திலிருந்து 15 மணி நேரம் வரைகூட நீள்கிறது.
இதன் விளைவாய் ஆங்காங்கே மின்வாரிய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல்கள் நிகழ்வதாக செய்திகள் கூறுகின்றன. நேற்ற்றிரவு சென்னையை அடுத்த பொன்னேரியில் ஒரு ஊழியர் தாக்கப்பட்டிருக்கிறார்.
கடந்த ஏப்ரலில் கூட ஷோலிங்கநல்லூரில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.
மின்வாரிய ஊழியர்கள் தங்களுக்குப் பாதுகாப்புவேண்டுமென்றும், தங்களைத் தாக்குவோர் மீது நடவடிக்கை வேண்டுமென்றும் கோருகின்றனர், ஆனால் தொடரும் மின்வெட்டின் காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீது நடவடிக்கை எடுத்து நிலையை மேலும் சிக்கலாக்க விரும்பவில்லை என அதிகார வட்டாரங்கள் கூறுகின்றன.
நேற்றுதான் மின்பற்றாக்குறை குறித்து உயர் மட்ட அதிகாரிகள் கூட்டம் ஒன்று சென்னையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மூத்த அதிகாரி ஒருவர் காற்றாலை உற்பத்தியில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதன் காரணமாகவும், மத்திய இணைப்பிலிருந்து மின்சாரத்தைக் கூடுதலாகப் பெறமுடியாத நிலையிலும் இத்தகைய மின்வெட்டு வடகிழக்குப் பருவமழை துவங்கும் வரை இப்பிரச்சினை தொடரக்கூடும் என்று கூறியிருக்கிறார்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியக்கூட்டமைப்பின் தலைவர் கே விஜயன் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கப்பால் மின்விநியோகத்தை சரியான முறையில் வாரியம் நிர்வகிக்கவில்லை, சென்னைக்கு மட்டும் நாளொன்றுக்கு ஒரு மணிநேரமே மின்வெட்டு மற்ற பகுதிகளுக்கு பத்துமணிநேரத்திற்கும் மேல் என்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரசியல் காரணங்களுக்காக இப்படிச் செய்கின்றனர்; சென்னை நுகர்வோர்கள் தாங்களாகவே முன் வந்து சிக்கனமாகப் பயன்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்கள். இதெல்லாம் நடைமுறை சாத்தியமே இல்லை, இருப்பதை சமமாகப் பங்கிடவேன்டுமென கூறியும், அத்தகைய யோசனைகளுக்கு நிர்வாகம் செவி சாய்ப்பதில்லை
thumbnail

காவிரி; உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மீண்டும் மனு

காவிரியில் தினசரி 2 டிஎம்சி வீதம், 24 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை துவங்கும் வரை, தமிழகத்துக்குத் தண்ணீர் தேவை என்று கூறியுள்ள தமிழக அரசு, காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால உத்தரவின்படியும், வறட்சி நிலவும் பற்றாக்குறை காலங்களில் தண்ணீரை பகிர்ந்துகொள்வது தொடர்பாக 2009-ம் ஆண்டு காவிரி கண்காணிப்பு குழு எடுத்த முடிவின்படியும், கர்நாடகம் தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளது.
காவிரி நடுவர் மன்ற உத்தரவின்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை என்று கூறிய தமிழக அரசு, அதுகுறித்து முடிவெடுக்க, காவிரி நதிநீர் ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்தார். அக் கோரிக்கை ஏற்கப்படாததால், பிரதமருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கடந்த 19-ம் தேதி டெல்லியில் பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெற்றது.
அதில், தினசரி 2 டிஎம்சி வீதம் 24 நாட்களுக்கு தண்ணீர் விட கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என ஜெயலலிதா வலியுறுத்தினார். ஆனால், கர்நாடகம் மறுத்தது. அதையடுத்து, செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை தினசரி 9 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட, ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் பிரதமர் ஓர் உத்தரவைப் பிறப்பித்தார். ஆனால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தர முடியாது என்று கூறிய கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், அந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெளிநடப்புச் செய்தார்.
இன்னொரு பக்கம், 9 ஆயிரம் கனஅடி நீர் என்பது எதற்குமே போதாது என்று கூறிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அந்த உத்தரவை ஏற்க மறுத்தார். அன்றைய கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலலிதா, மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடுவதைத் தவிர தமி்ழ்நாட்டுக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்தார்.
அதன்படி, தமிழக அரசு செவ்வாய்க்கிழமையன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. கடந்த முறை விசாரணை நடைபெற்றபோது, காவிரி ஆணையக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படாவிட்டாலோ, கூட்டம் நடைபெறாவிட்டாலோ சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
அதை தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ள தமிழகம், பற்றாக்குறை காலங்களில் தண்ணீரை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்பது தொடர்பாக 2009-ம் ஆண்டு காவிரி கண்காணிப்புக் குழு உருவாக்கியுள்ள வழிகாட்டு முறைகளை அமல்படுத்த கர்நாடக மாநிலத்துக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
thumbnail

தயாநிதி அழகிரிக்கு முன் ஜாமின் இல்லை ! ஐகோர்ட் நீதிபதி தள்ளுபடி செய்தார்

மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு முன் ஜாமின் வழங்க முடியாது என ஐகோர்ட் மதுரை கிளை கைவிரித்து விட்டது. கிரானைட் மோசடி வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த முன் ஜாமின் மனு தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.
மதுரை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கிரானைட் நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம் அறிக்கை சமர்ப்பித்தார். இந்த அறிக்கையின்படி தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகள் எடுத்தது. தமிழகம் முழுவதும் உள்ள குவாரி மற்றும் உரிமையாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன.

பல ஆயிரம் கோடி சம்பாதிப்பு :

மதுரை மேலூர் பகுதியில் குவாரி நடத்தி பல ஆயிரம் கோடி சம்பாதித்த பி.ஆர்.பழனிச்சாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டுள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக குவாரி உரிமையாளர் மற்றும் கனிம வளத்துறை உயர் அதிகாரிகள், முன்னாள் மாவட்ட கலெக்டர் வீடுகளில் ஒரே நேரத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் சொத்து மற்றும் முறைகேடான ஆவணங்களை அதிகாரிகள் அள்ளிச்சென்றனர்.

இந்நிலையில் மதுரையில் ஒலிம்பஸ் என்ற பெயரில் மத்திய அமைச்சர் அழகிரி மகன் தயாநிதி கிரானைட் குவாரி நடத்தி வருகிறார். இவரது குவாரியிலும் முறைகேடு நடந்திருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் போலீசார் தன்னை கைது செய்யக்கூடாது என சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் தயாநிதி அழகிரி முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி. மதிவாணன் மனுவை தள்ளுபடி செய்தார்.

சிந்து கிரானைட் நடத்தி வரும் பி.கே.செல்வராஜ், இவரது மனைவி சாந்திசெல்வராஜ், மகன் சூர்யபிரகாஷ், ( முன்ஜாமின்) முன்னாள் கனிமவள உதவி இயக்குனர் சண்முகவேல் ( ஜாமின் ) தயாநிதிஅழகிரி ( முன்ஜாமின்) ஆகியோர் மனு மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. இதில் சாந்தி செல்வராஜூக்கு மட்டும் முன்ஜாமின் வழங்கி ஏனைய 4 பேர் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.
thumbnail

பெரியார் தி.க.பிரமுகர் கொலையில் கைதான தளி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பெரியார் தி.க. கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் பழனி கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி துப்பாக்கியால் சுடப்பட்டும், தலை துண்டித்தும் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக தளி ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர்.
 
இந்நிலையில் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. மீது அடுத்தடுத்து பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
 
பேரிகை அருகே விவசாயி ஆலம்பாஷா என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். தொடர்ந்து உத்தனப்பள்ளி போலீசார் கனிம வளங்களை வெட்டி எடுத்ததில் முறைகேடு செய்ததாக தொடர்ந்த 2 வழக்குகளிலும் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.கைது செய்யப்பட்டார்.
 
அதன்பின்பு தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டை, சந்தனப்பள்ளி பகுதிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலும் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.
 
இதேபோல் ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்குள் புகுந்து பெரியார் தி.க.பிரமுகரை தாக்கிய வழக்கிலும் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். இப்படி தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க தேன்கனிக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் கதிர்வேல் ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமாருக்கு பரிந்துரை செய்தனர்.
 
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார், ராமச்சந்திரன் எம்.எல்.ஏ.வை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க கலெக்டர் மகேஸ்வரனுக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. வை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
 
சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை கிருஷ்ணகிரி போலீசார் சேலம் கொண்டு வருகிறார்கள். குண்டர் சட்டத்தில் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Monday, September 24, 2012

thumbnail

மக்காயாலா பாடல் வரிகள்.. – நான்

மக்காயாலா பாடல் வரிகள்.. – நான்



.
பல்லவி
.
மக்காயாலா மக்காயாலா காயமாவுவா..
மக்காயாலா மக்காயாலா காயமாவுவா..
மக்காயாலா மக்காயாலா காயமாவுவா..
எலா..  எலா.. எலா.. ( விஜய் ஆண்டனி )
.
இளமைக்கு எப்பொழுதும் தயக்கமில்லை..
தடையேதும் கண்களுக்குத் தெரிவதில்லை..
எங்களுக்குக் கால்கள் இன்று தரையில் இல்லை..
இல்லை.. இல்லை.. இல்லை..
.
தனிமையிலே கூச்சம் இல்லை..
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை..
காற்றுக்கென்றும் பாரம் இல்லை..
எல்லைகள் மீறு தப்பில்லை..
.
மக்காயாலா.. மக்காயாலா..
.
சரணம்  1
.
இரவினில் தூக்கம்  கிடையாதே..
பகல்வரை ஆட்டம் முடியாதே..
கலர் கலர் கனவுகள் குறையாதே.. குறையாதே..
.
நேற்றைய பொழுது கடந்தாச்சே..
நாளைய பொழுது கனவாச்சே..
இன்றைய பொழுது நம் வசமாச்சே வசமாச்சே..
.
நண்பர் கூட்டம் ஒன்றாக சேர்ந்தால் பொங்கும் சந்தோசம்..
கோடி கோடி ஆசைகள் வந்து கதவு தட்டும்..
.
மக்காயாலா.. மக்காயாலா..
.
சரணம்  2
.
நட்புக்கு நேரங்கள் தெரியாதே..
பேச்சுகள் தொடர்ந்தால் முடியாதே..
இடைவெளி இங்கே கிடையாதே.. கிடையாதே..
.
மனதுக்குள் எதையும் அடைக்காதே..
வாய்ப்புகள் மறுபடி கிடைக்காதே..
இருப்பது ஒரு லைப் மறக்காதே.. மறக்காதே..
.
நண்பன் தோளில் சாய்ந்தாலே போதும் கவலைகள் தீரும்..
இன்ப துன்பம் நேர்கின்ற போதும் நட்பு தாங்கும்..
.
மக்காயாலா.. மக்காயாலா..

Title Lyrics Singer(s) Length
1. "Makkayala Makkayala"   Priyan Krishan Maheson, Mark Thomas, Shakthi Shree 4:52
thumbnail

தாண்டவம் படம் தணிக்கை முடிந்து வரும் செப்டம்பர் 28 திரைக்கு வரவுள்ளது



நடிகர் விக்ரம் நடித்துள்ள தாண்டவம் படம் தணிக்கை முடிந்து வரும் செப்டம்பர் 28 திரைக்கு வரவுள்ளது.  இந்த படத்திற்கு தணிக்கை குழுவினர் U சான்று அளித்துள்ளனர்.  படத்தின் சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில் படக்குழுவினர் செப்டம்பர் 28 ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.
thumbnail

பர்ஃபி - இந்தியாவுக்கான ஆஸ்கர் பரிந்துரை

இந்த வருடம் இந்தியா சார்பில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவுக்கு பர்ஃபி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் இந்தியா சார்பில் சிறிந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு படங்கள் அனுப்பப்படுவதுண்டு. இந்த வருடம் பாலா‌ஜி சக்திவேலின் வழக்கு எண், முருகதாஸின் 7 ஆம் அறிவு, அனுராக் காஷ்யபின் கேங்ஸங் ஆஃப் வாஸேபேர், வித்யாபாலன் நடித்த கஹானி, அனுராக் பாஸுவின் பர்ஃபி உள்பட 20 படங்கள் தேர்வுக்கு வந்தன. இதில் பர்ஃபியை தேர்வுக்குழு ஆஸ்கருக்கு பரிந்துரைப்பது என முடிவு செய்துள்ளது.

ரன்பீர் கபூர், ப்ரியங்கா சோப்ரா, இலியானா நடித்திருக்கும் பர்ஃபி விமர்சனரீதியாக பாராட்டை பெற்றுள்ளது. கலெக் ஷனும் அபாரம். முதல் வாரத்தில் 58 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. வாய் பேச முடியாத, காது கேளாத இளைஞனாக இதில் ரன்பீர் நடித்துள்ளார். சில காட்சிகளும், ரன்பீரின் மேனரிசமும் சாப்ளினை இமிடேட் செய்வதாக உள்ளது. இதனை அனுராக் பாஸுவே ஒப்புக் கொண்டிருக்கிறார். மாற்றுத் திறனாளிகளை வைத்து சோகத்தில் தோயத்து எடுக்காமல் அவர்களின் உலகை சுவாரஸியமாகவும், சிரிக்கிற மாதிரியும் சொல்லியிருப்பதுதான் பர்ஃபியின் வெற்றி.

பர்ஃபிக்கு ஆஸ்கர் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
thumbnail

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு விலைவா‌சி உய‌ர்வு காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 ‌விழு‌க்காடு அக‌விலை‌ப்படி உய‌ர்‌த்த அரசு முடிவு செ‌ய்து‌ள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகம் உயர்ந்து விட்டதை அடுத்து மத்திய அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை கணிசமான அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை பரிசீலித்த மத்திய அரசு, ஊழியர்களுக்கு த‌ற்போது வழங்கிவரும் 65‌ விழு‌க்காடு அகவிலைப்படியை 7 ‌விழு‌க்காடு உயர்த்தி 72 ‌விழு‌க்காடு வழ‌ங்க முடிவு செ‌ய்து‌ள்ளது. அகவிலைப்படி உயர்வு காரணமாக 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறுவர். இந்த உயர்வு ஜூலை மாதம் முதல் தேதியில் இருந்து முன் தேதியிட்டு வழங்கப்படலா‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது
thumbnail

சர்ச்சைக்குரிய படம் தயாரித்தவர் தலைக்கு பரிசு அறிவிப்பு: பாகிஸ்தான் மந்திரிக்கு அமெரிக்கா கண்டனம்

தி இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்படத்தை அமெரிக்காவைச் சேர்ந்த தயாரிப்பாளர் தயாரித்து வெளியிட்டார். இந்த படம்  நபிகள் நாயகத்தை அவமதித்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறி உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி குலாம் அகமது பிலோர்ஸ், இஸ்லாமை அவமதித்து வரும் எந்த செய்திகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளரை கொல்பவர்களுக்கு ரூபாய் 55 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இதை அமெரிக்கா கண்டித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறத் துறை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:-

தலைவர்கள் பொறுப்புடன் இருந்து வன்முறைக்கு எதிராக பேசுவது, நடந்துகொள்ளவது மிக முக்கியம். வன்முறையை தூண்டும் விதத்தில் பொறுப்பற்ற முறையில் அவர்  பேசியிருப்பதில் எந்த வித நியாயமும் இல்லை.

அமெரிக்காவிற்கு எதிராக நடந்து வரும் போராட்டம், வன்முறை மற்றும் அவமதிப்பு போன்றவை குறித்த வீடியோ காட்சிகளை அதிபர்  ஒபாமா மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் பார்த்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரெயில்வே மந்திரி இவ்வாறு பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்து என்றும், பாகிஸ்தானின் அரசியல் சட்டம் பற்றி அவர் பேசவில்லை என்றும் பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
thumbnail

90 ரன்னில் இங்கிலாந்தை வீழ்த்தியது: சுழற்பந்து வீரர்களுக்கு டோனி பாராட்டு

20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ரன்னில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தியது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன் எடுத்தது. ரோகித்சர்மா 33 பந்தில் 55 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்), காம்பீர் 38 பந்தில் 5 பவுண்டரியுடன் 45 ரன்னும், வீராட் கோலி 32 பந்தில் 40 ரன்னும் (6 பவுண்டரி) எடுத்தனர். ஸ்டீவன்பின் 2 விக்கெட்டும், டென்பெஞ்ச், சுவான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய சுழற்பந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் திணறியது. அந்த அணி 14.4 ஓவரில் 80 ரன்னில் சுருண்டது. தொடக்க வீரர் கீவ்ஸ் வெட்டர் அதிகபட்சமாக 35 ரன் எடுத்தார். நீண்ட இடைவேளிக்கு பிறகு இடம் பெற்ற ஹர்பஜன்சிங் மிக சிறப்பாக பந்து வீசினார். அவர் 12 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார். பியூஸ் சாவ்லா, இர்பான்பதான் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

நேற்றைய போட்டிக்கான இந்திய அணியில் அதிரடியான மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. ஷேவாக், ஜாகீர்கான், அஸ்வின் ஆகியோர் இடம் பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக ஹர்பஜன்சிங், பியூஸ் சாவ்லா, அசோக் திண்டா ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

ஷேவாக், ஜாகீர்கான், அஸ்வின் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஷேவாக், ஜாகீர்கான் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் நீக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது. இந்திய அணி 6 பேட்ஸ்மேன், 5 பவுலருடன் நேற்று களம் இறங்கியது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் டோனி கூறியதாவது:-

சுழற்பந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக வீசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். குறிப்பாக ஹர்பஜன்சிங் பந்துவீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு நன்றாக வீசினார்.

இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீரர் அஸ்வினுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அவருக்கு பதிலாக இடம்பெற்ற ஹர்பஜனும், சாவ்லாவும் நன்றாக பந்து வீசினார்கள். இதேபோல ரோகித்சர்மா, காம்பீர் ஆகியோரது பேட்டிங் அபாரமாக இருந்தது.

ஆடுகளத்துக்கு தகுந்தவாறு ரோகித் சர்மாவை யுவராஜ் சிங்குக்கு முன்னதாக களம் இறக்குவோம். ஹர்பஜன்சிங்கும், பியூஸ் சாவ்லாவும் சிறப்பாக பந்து வீசியதால் இனி வரும் போட்டிகளில் 11 வீரர்களை தேர்வு செய்வதில் பல பிரச்சினைகள் தற்போது ஏற்பட்டுள்ளது. கடுமையான முடிவே என்றாலும் சிறந்த அணியை தேர்வு செய்வோம்.

சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளித்தது கடினமான முடிவே. ஆனால் அனைத்து வீரர்களும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

இவ்வாறு டோனி கூறினார்.

தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஸ்டூவர்ட் பிராட் கூறும்போது, எங்கள் அணி வீரர்கள் மோசமாக ஆடினார்கள். ஹர்பஜன்சிங் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது என்றார்.

Sunday, September 23, 2012

thumbnail

கூடங்குளம் முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி

கூடங்குளம் முதலாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி 10 நாளில் முடிவடையும் என்று டெல்லியில் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்ப, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. அவற்றை இந்திய அணுசக்தி கழகம் பூர்த்தி செய்து, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்துக்கு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை மாலையில் அணு உலையில் எரிபொருள் நிரப்ப, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில், மறுநாள் (புதன்கிழமை) காலையில், முதலாவது அணு உலையில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் உருளைகள் எரிபொருளாக நிரப்பும் பணி தொடங்கியது. ஒவ்வொன்றும் 5 செ.மீ. விட்டமுள்ள 163 யுரேனியம் உருளைகள் அதில் நிரப்பப்படும். இந்த எரிபொருள் நிரப்பும் பணி இன்னும் 10 நாட்களில் முடிவடையும்’’என்று தெரிவித்துள்ளார். எரிபொருள் முழுவதும் நிரப்பப்பட்டதும், தேசிய அணுசக்தி கழகம் அந்த யுரேனியத்தை பிளந்து, மின் சக்தியாக மாற்றும் (மின் உற்பத்தி) வேலைகளை தொடங்கும். முன்னதாக, ஒவ்வொரு கட்ட பணிகள் நிறைவடைந்ததும், அடுத்த கட்டப் பணிகள் தொடங்குவதற்கு முன்பு, அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை அணுசக்தி கழகம் பெறும். அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அதை திறனாய்வு செய்து, அனுமதி வழங்கியதும், அதன் மேற்பார்வையில் மின் உற்பத்தி தொடங்கும்.
thumbnail

முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு

சட்டவிரோதமாக செம்மண் அள்ள உதவியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள 5 குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளப்பட்டதாக, வானூர் வட்டாட்சியர் குமாரப்பாலன் என்பவர், விழுப்புரம் குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜ மகேந்திரன் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொன்முடி கனிமவளத்துறைஅமைச்சராக இருந்தபோது, சட்டவிரோதமாக செம்மண் அள்ள, உதவியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குவாரிகளில் 90 அடி வரை செம்மண் அள்ளியதாக கூறப்படுகிறது. இது குறித்து பள்ளியந்தூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
thumbnail

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்-9 மாநகராட்சிகள், 35 நகராட்சிகள் மற்றும் 101 பேரூராட்சிகளில் குழல் விளக்குகளுக்கு பதிலாக, எல்.இ.டி. போன்ற ஆற்றல் மிக்க மின் விளக்குகள்

தமிழகத்தில் உள்ள 9 மாநகராட்சிகள், 35 நகராட்சிகள் மற்றும் 101 பேரூராட்சிகளில் குழல் விளக்குகளுக்கு பதிலாக, எல்.இ.டி. போன்ற ஆற்றல் மிக்க மின் விளக்குகள் பொருத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
.

இதற்கென உயர்மட்ட அதிகார குழு மற்றும் தொழில்நுட்ப குழுக்கள் அமைக்கப்படும் என்றும், இதற்காக பொது ஏல ஆவணம் அறிமுகப்படுத்தி, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் இதனை நடைமுறைப்படுத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், சேலம், ஓசூர், கொடைக்கானல், தேனிஅல்லிநகரம் உள்ளிட்ட 10 நகராட்சிகளுக்கு ரூ.37 கோடி செலவில் புதிய அலுவலகங்கள் கட்டிடங்கள் கட்டுவதற்காக அரசு மானியமாக ரூ.26 கோடி வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நகர்ப்புறத்தில் வாழும் மக்களின் எதிர்பார்ப்பிற்கேற்ப அவர்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்துவதும், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் இன்றியமையாததாக இருக்கும் சூழ்நிலையில், பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் பராமரிப்புக்கான செலவுகளை எதிர்கொள்வதில் நகராட்சிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றன என்பதால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் நகராட்சிகளின் எரிசக்தி மற்றும் பராமரிப்பு செலவினை குறைக்கும் வகையில்,  திறன் குறைந்த குழல் விளக்குகளுக்குப் பதிலாக திறன் மிகுந்த எல்இடி/ சூரிய சக்தி மின்விளக்குகள் பயன்படுத்துதல்; தெரு விளக்குகள் ஒளிர்வதில் ஒளியின் அளவை மட்டுப்படுத்தும் முறையினை பின்பற்றி, மின் நுகர்வினை  குறைப்பது; தெரு விளக்குகளை பயன்படுத்துவதில் மேம்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டு முறையினை பயன்படுத்தி, திறமையான பராமரிப்பு மேற்கொள்ளுதல்; ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். இம்முறைகளை கடைப்பிடிப்பதால் ஏற்படும் பயன்களை குறிப்பிட்ட கால முறையில் மூன்றாம் நபர்/முகமை மூலம் அளவிடுதல் மற்றும் ஆய்வு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

About