Monday, May 21, 2012

thumbnail

கவனத்தைக் கவரும் கடல்சார் படிப்புகள்!

உலகின் மிகப்பெரிய சொத்து கடல். பல்வேறு வகையான உயிரினங்களின் வாழிடம் அது. நிலத்தில் கிடைக்காத பல அரிய வளங்கள் கடலில் இருக்கின்றன. பல்வேறு வகையான வர்த்தகத்துக்கும், போக்குவரத்துக்கும் கடல் பயன்படுகிறது. மீன்பிடித்தல், துறைமுகப் பணிகள், கப்பல் பணிகள், கடல் தொடர்பான சட்டங்கள், கடல் வணிக மேலாண்மை என கடலைச் சார்ந்த துறைகள் ஏராளம். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் கடல் சார்ந்த பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், மீன்பிடி தொழில், சுற்றுலா, தாதுவளம் பயன்பாடு, உப்பு தயாரிப்பு போன்றவை நடந்து வருகிறது. குறிப்பாக தமிழக கடற்கரை பகுதிகளில் கடற்பாசி, கடற்புல், கடல் தாவரங்கள் உள்ளிட்டவை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொக்கிஷமாக உள்ளன.
கடல்சார் துறைகளில் தாரளமான வேலைவாய்ப்பு இருக்கிறது. கடல் தொடர்பான வேலைகளுக்குப் படிக்கும் படிப்புகளை கடல் சார் படிப்புகள் என்று அடக்கினாலும், அதில் பலவகையான பிரிவுகள் இருக்கின்றன. அவ்வப்போது புதிது புதிதாகப் பல்வேறு துறைகள் வந்துகொண்டும் இருக்கின்றன. இதில் விசேஷம் என்னவென்றால், கடல்சார் படிப்புகளுக்கு அதிக வேலை வாய்ப்பு இருப்பதுடன், ஊதியமும் மற்ற துறைகளைக் காட்டிலும் மிக அதிகமாகவே இருக்கிறது. கடல்சார் படிப்புகளில் மிகவும் அதிக வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதும், பிரபலமானதும் மெரைன் என்ஜினியரிங் எனப்படும் கடல்சார் பொறியியல் படிப்பாகும். கடந்த பல வருடங்களாகவே, இந்தப் படிப்பில் மாணவர்களின் ஆர்வம் பெருமளவில் அதிகரித்து வந்திருக்கிறது.
அந்த படிப்பு தற்போது பல பொறியியல் கல்லூரிகளில் பாடப்பிரிவாக இருந்து கற்றுகொடுக்கப்பட்டாலும், அந்தப் படிப்பிற்கென்றே சில பிரத்யேக கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் மிக முக்கியமானதும் தலைமையானதும் சென்னையில் அமைந்துள்ள மத்திய கடல்சார் பல்கலைக்கழகம். இந்தியாவில் கடல்சார் படிப்புகளுக்கென்று பல்கலைக்கழகம் வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 2008-ம் ஆண்டில்தான் நிறைவேறியது. இதற்கென நாடாளுமன்றத்தில் பிரத்யேகச் சட்டம் இயற்றப்பட்டு கடல்சார் பல்கலைக்கலைக்கழம் சென்னை உத்தண்டியில் (ராஜீவ் காந்தி சாலை - கிழக்குக் கடற்கரைச் சாலை இடையே) அமைக்கப்பட்டது.
4 ஆண்டு பி.டெக். கடல்சார் பொறியியல் மற்றும் 3 ஆண்டு பி.எஸ்சி, கப்பல் கட்டுமானம் மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட படிப்புகளை இந்தப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. 17 முதல் 25 வயதுக்கு உள்பட்ட 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்தப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் சராசரியாக 60 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும். ஆண்டுக்கு ரூ.2.25 லட்சம் வரை கட்டணம் இருக்கும். பிஎஸ்சி படிப்பு கொச்சியில் நடக்கும். இந்தப் பல்கலைக்கழகத்துடன் 7 முக்கிய கடல்சார் அரசு கல்வி நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அவை:
1. தேசிய கடல்சார் கல்வி நிறுவனம், சென்னை,
2. டி.எஸ்.சாணக்யா, மும்பை.
3. லால்பகதூர் சாஸ்திரி கடல்சார் உயர் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, மும்பை.
4. கடல்சார் பொறியியல் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம், மும்பை.
5. கடல்சார் பொறியியல் ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம்.
6. கொல்கத்தா, இந்திய துறைமுக மேலாண்மைக் கல்வி நிறுவனம்.
7. தேசிய கப்பல் வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், விசாகப்பட்டினம்.
இவை தவிர கொச்சியில் இந்திய கடல்சார் பல்கலைக்கழக வளாகம் அமைந்துள்ளது


முகவரி: தேசிய கடல்சார் கல்வி நிறுவனம்,
கிழக்கு கடற்கரை சாலை, உத்தண்டி,
சென்னை 600 119.
தொலைபேசி : (044) 24530343 / 345.
பேக்ஸ் : (044) 2453 0342.
மின்னஞ்சல் : imu.chennaicampus@yahoo.com
டி.எஸ்.சாணக்யா கல்வி நிறுவனம்
அரபிக் கடலோரம் நவி மும்பையில் டி.எஸ். சாணக்யா பயிற்சிக் கப்பல் கல்வி நிறுவனம் அமைந்துள்ளது. உலகில் தலைசிறந்த கடல்சார் கல்வி நிறுவனங்களுள் இதுவும் ஒன்று.
இங்கு கற்றுத்தரப்படும் படிப்புகள்:
1. பி.எஸ்சி. - கப்பல் செலுத்தும் அறிவியல் - 3 ஆண்டுகள்
2. கப்பல் செலுத்தும் அறிவியல் டிப்ளமா - 1 ஆண்டு
3. நவீன தீ தடுப்பு படிப்பு - 1 வாரம்
4. சர்வதேச கடல்சார் நெருக்கடிகள் பாதுகாப்பு  அமைப்பு தொடர்பான படிப்பு - 2 வாரங்கள்
பி.எஸ்சி படிப்புக்கு ஐ.ஐ.டி. கூட்டு நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும், 20 வயதுக்கு மேற்படாத திருமணமாகாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும். கல்விக் கட்டணம் 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.98 ஆயிரம்.
முகவரி: டி.எஸ். சாணக்யா கல்வி நிறுவனம், நியூ மும்பை, தொலைபேசி : (022) 2770 1935 / 2770 3876.பேக்ஸ்: (022) 2770 0398
லால்பகதூர் சாஸ்திரி கல்லூரி- கடல்சார் உயர் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி கல்வி நிறுவனம்:

Subscribe by Email

Follow Updates Articles from This Blog via Email

No Comments

About